Saturday, June 30, 2012

மழையெனப்படுவது…




ஆகாய மலையிலிருந்து
ஆர்ப்பரித்து கொட்டும் அருவி
நிலப்பரப்பில்-
மேடெது பள்ளமெது என்று
அறிய உதவும் கருவி.

மேகப் பிள்ளைகள்
மோதிக்கொள்வதைப் பார்த்த
வானத் தாயின் அழை!
காலம் -
பூமியை கௌரவித்து போர்த்தும்
நீர் ஆடையின் இழை!

நீர் மை ஊற்றி
வானம் வரையும்
நேர்கோட்டோவியம்.
மண் மன்னனை மகிழ்விக்க
காற்றுப் புலவன் படைக்கும்
ர்20 காவியம்.

தொண்டை வரண்டு கிடக்கும்
நதிகளின்
தாகம் தீர்க்கும் பானம்.
அது-
ஆகாயப்பானையிலிருந்து
பொங்கி வழிகிற வானம்.

அறிவியல்பூர்வமாய்
பார்க்கப்போனால்
அதன் பெயர்
நீரியல்சுழற்சி
அப்படியே பார்த்தால்-
தூறல் பாட
இடி இசையமைக்க
மின்னல் நடனமிட
அது இயற்கையின்
ஆடலும் பாடலும் நிகழ்ச்சி

உச்சி வானத்தையும்
தாழ கிடக்கும் பூமியையும்
இணைக்கும்
சமத்துவ பாலம்
மேலிருந்து விழுந்து
மண்ணுக்குள் நுழைந்து - பின்
செடி-கொடி-மரம்-புல்-பூண்டென
முளைத்து வருகிற ஞாலம்.


புதுவைப்பிரபா

Monday, June 18, 2012

நடிகை தமனாவின் தீவிர ரசிகன் ஒருவன்...கனவுலகில்... தமனாவின் காதலனாக மாறி...கற்பனையில் பாடுகிறான். இதை பாட்டுக்கான களமாக வைத்து புனையப்பட்ட பாடல் இது....

http://www.youtube.com/watch?v=N1Wvag0zTuA&feature=plcp

Monday, May 7, 2012

கடவுள்... பற்றி   நான் எழுதி இசைத்த பாடல்
http://www.youtube.com/watch?v=rD1wBx7XN3E&feature=relmfu  
காதல் பற்றிய எனது சொந்த மெட்டை - வரிகளை - குரலை சுமக்கும் ஒரு  பாடல்
http://www.youtube.com/watch?v=U1DpZ5_jT0U&feature=youtu.be
காதல்  சைக்கோ இசை ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள எனது பாடல்
http://www.youtube.com/watch?v=nAYo5afr-24&feature=youtu.be

Monday, December 19, 2011

எனது கவிதைக்கு முதல் பரிசு

சேனைத் தமிழ் உலா என்னும் இணைய தளம் உலக தமிழருக்கான கவிதைப்போட்டி ஒன்றினை அறிவித்து நடத்தியது. அதில் எனது கவிதைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. பரிசுத் தொகையாக ரூபாய் ஐயாயிரத்திற்கான காசோலையை சேனைத் தமிழ் உலா இணைய தளம் வழங்கியது.
விவரங்களுக்கு. . .
http://www.chenaitamilulaa.net/t27326-topic

Thursday, December 15, 2011

மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .






மகாகவி பிறந்த எட்டையபுர வீட்டில் அவன் பிறந்த நாளன்று. . .