கொட்டும் மழையில்-நான்
குடை விரிப்பதில்லை
கொளுத்தும் வெய்யிலில்-நான்
நிழல் தேடுவதில்லை
நடுங்கும் குளிரில்-நான்
ஸ்வெட்டர் அணிவதில்லை
புழுங்கும் அறையில்-நான்
விசிறி கேட்பதில்லை
குடையாய் நிழலாய்
ஸ்வெட்டராய் விசிறியாய்
என் தேவைக்கேற்றபடி
மாற்றம் கொண்டியங்குகிறாய்
நீ!
எல்லாம் நீயென்று
ReplyDeleteஏந்திழையாள் வர்ணித்தாய
நன்றாய் உமது பணி
நாளும் தொடரட்டும்
வாழ்த்துகள் பிரபா