மணமகளே இல்லாமல் கூட திருமணம் நடக்கும் பேனர் இல்லாமல்?
பிரபலங்களின் பிறந்தநாள் விழா தொழிலதிபர் வீட்டு பூப்பூ நீராட்டு விழா காதணி விழா- குடிபுகு விழா- எல்லாவற்றிற்கும் பிரமாண்டமான பேனர்கள்
ஏழு- பதினாறு- முப்பதாம் நாள் துக்கத்திற்கும் கண்ணீர்துளி சொட்டும் கருப்பு வெள்ளை பேனர்கள்
அடச்சீ! ஒரே ஒரு சடங்கிற்குத்தான் இன்னும் யாரும் பேனர்வைக்கத் துணியவில்லை
ஆனால்... ஆடம்பரத்தின் அடையாளமாக விளம்பர மோகத்தின் வெளிப்பாடாக விளங்கும் பேனர்களின் மீதான ஆத்திரம் அடங்கிப்போகிறது- ஆர்ப்பாட்டமில்லாமல் அது ஓட்டைக்குடிசைகளுக்கு திரையாகிடும்போதும் ஏழைக் குளியலறைக்கு சுவராகிடும்போதும்.
No comments:
Post a Comment