ஆறேழு மாசமா
ஆல மூடி கெடக்குது
அங்க இங்க வேல செஞ்சி – குடும்பம்
கௌரவமா நடக்குது
போன பண்டிகைக்கு
போட்டு வச்ச துணியிருக்கு
சாயந்தான் போகலியே
புதுசா துணியெதுக்கு ?
உங்கம்மா வேல பார்க்கும்
வீட்டுல தருவாங்க
நீ வேணா பாரு – அவுங்க
லட்டோட வருவாங்க
அன்னிக்கி பேய்மழை
பெய்யும்னு டீ.வியில
ரமணன் சொல்லிட்டதால்
பட்டாசு தேவையில்ல
கடன் வாங்கி தீவாளி
கொண்டாட மனசு இல்ல
போலி ஆடம்பரம்
தேவையா சொல்லு புள்ள ?
ஏழ்மையிலும் நம் உள்ளம்
நெசமாவே சிரிக்கும்
அதுல பாரு சந்தோசம்
மத்தாப்பா தெறிக்கும்
-----------------------------
புதுவைப்பிரபா
அருமை... கவிதையை (இணைப்பை) நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... கலந்து கொண்டமைக்கு நன்றி...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
நன்றி தோழர்... தங்களது வாழ்த்துகளுக்கும் பாராட்டுதலுக்கும்
ReplyDeleteஏழைகளின் வாழ்வின் நிதர்சனத்தை அப்படியே கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
ReplyDeleteதங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....
என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
யதார்த்த வரிகள்...! தொடருங்கள்.. எனது வலைப்பூவிற்கும் வருகை தாருங்கள்...!
ReplyDelete