பகிர்ந்துண்ணும் பழக்கம்
காணாமல் போயிருந்ததால்
வைத்த ஒரு தட்டு சோற்றையும்
ஒண்டியாய் உண்ண நினைத்தது
ஒரு காகம்
உண்ண எத்தனித்தபோது
எதிர்பாராமல்;
இன்னும் சில காகங்கள்
வந்தமர்ந்தது
உண்ணுவதை விட்டுவிட்டு
வந்த காகங்களை
விரட்டுவதிலேயே
குறியாய் இருக்க. . .
இடைப்பட்ட நேரத்தில்
அங்கு வந்த பூனையொன்று
பசியாறிப்போயிற்று
எந்த காகத்திற்கும்
பருக்கைச் சோறுக்கூட
கிடைக்காமல்போனது
ஆனாலும்-
"அப்பாடா. . .யாருக்கும் கிடைக்கலை"
வருத்தமற்று, நிம்மதியாய்
பறந்துபோயின காகங்கள்
தமிழ் எழுத்தாளர்கள் குடியிருப்பு
மாடி ஒன்றிலிருந்து.
தமிழர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதை ,ஒற்றுமையாய் பகிர்ந்துண்ணும் காகங்களின் சண்டை மூலம் விளக்கியமை அருமை பிரபா வாழ்த்துகள்
ReplyDelete