Friday, January 8, 2010

உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை


அர்த்தம் கெட்ட அகராதி

வழக்கமான நேரத்திற்கு
நீ படுக்கையைவிட்டு எழாதபோது
கழுத்திடுக்கில் கை வைத்துப் பார்க்கிறேன்
"காச் மூச்சென்று " கத்துகிறாய்

குளியலறையில் நீ இருக்கும்போது
எத்திசையில் இருந்து பெரும் சப்தம்
எழுந்தாலும்
"என்னங்க ஆச்சு" என்று
துடித்துப்போய் கேட்கிறேன்.
காதில் விழாததுபோல் மௌனம் காக்கிறாய்.

வீட்டிலிருந்து புறப்பட்டுபோய்
மணிநேரம் ஆனதும்
கைப்பேசயில் அழைத்து
"பத்திரமாக ஆபீஸ் போய்ட்டீங்களா?"என்று
கேட்டு முடிப்பதற்குள்
"ம்ம்" என்று முடிக்கிறாய்.

மதிய உணவில்
உப்பு புளி காரம்
சரியாக இருந்ததாயென்று
கேட்கபதற்கான என் அழைப்பிற்கு தவறாமல்
"ஸ்விட்ச் ஆ ப் " என்று
பதில் வந்து விழச்செய்கிறாய்.

வீடு திரும்பியதும்
உன் விரல் நுனியில் பட்டிருக்கும்
மையைக் காயமென எண்ணி
"ஐயையோ! " ஏன்று எட்டித்தொடுகையில்
கொதிகலனை தொட்டது போல்
விருட்டென்று விரல் இழுத்து
முகம் சுளிக்கிறாய்


இந்த ஓரிரு செய்கைகள் போல்
ஓராயிரம் செய்கைகள்
நடந்தேறியிருக்கிறது
இவைகளை நான்
"அக்கறை"
என்று அர்த்தப் படுத்திகொள்கிறேன்

ஆனால்
உன் அர்த்தங்கெட்ட அகராதியில்
இதற்கெல்லாம் பெயர்
"தொந்தரவு"

5 comments:

  1. unmai,
    penmaiyin unarvai nandraaga pathinthu irukireergal vetri pera vaazhthukkal
    padma

    ReplyDelete
  2. கவிதாயினி பத்மா அவர்களே. . .
    தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க ந்ன்றி.

    புதுவைப்பிரபா

    ReplyDelete
  3. பெண்களின் ஆழமான உணர்வை அழகான கவிதைமூலம் அர்த்தப்படுத்தியிருக்கும் நண்பர் பிரபா அவர்களுக்கு வாழ்த்துக்கள் (ஆண்களைப்பத்தியும் கொஞ்சம் யோசிக்கப்பா..)
    புதுவை வெ. செந்தில்

    ReplyDelete
  4. நல்ல கவிதை. வெற்றிபெற வாழ்த்துகள்..!

    ReplyDelete
  5. அக்கறையை தொந்தரவாக நிணைக்கும் ஆண்களுக்கு
    பெண்களின் மனத்தை உணர்த்தும் எதார்த்தமான கவிதை.
    'கொதிகலனைத் தொட்டது' போல் நல்ல சொல்லாடல்
    வாழ்த்துகள் பிரபா

    ReplyDelete