Thursday, June 18, 2009

சிறுகதை-1

பரிசு
வீட்டிலிருந்தவர்கள் ஆளுக்கோர்; யோசனை சொன்னார்கள். ~ஏம்பா. . .இந்த சட்டை வேணாம்பா. . . அந்த கதர் சட்டைபோல ஒன்னு சந்தன கலர்ல வச்சியிருக்கியே. . . அத போட்டுட்டுப்போ. . என்றார் அப்பா.
~என்னங்க . . . இன்னிக்கி நான்தான் உங்களுக்கு தலை வாரிவிடுவேன். அப்பதான் போட்டுவுல நல்லாயிருக்கும் மனைவி சொன்னாள்.
~அண்ணே! பஸ்டாண்டுக்கு ஆட்டோவுல போகாத. . . நான் வண்டியில கொண்டுபோய் விடுறேன் என்று தம்பி கூறினான்.
ஒரு தொலைக்காட்சி நடத்திய தனித்திறன் போட்டியில் எனக்கு முதல் பரிசு.
இன்று மாலை சென்னையில்ää ஒரு திருமணமண்டபத்தில் அந்த தொலைக்காட்சியின் ஆண்டு விழாவும்ää சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளும் அதற்கிடையில் பரிசளிப்பு விழாவும் நடக்க இருக்கிறது.போட்டி முடிவுகள் வந்த நாளிலிருந்தே வீட்டிலிருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சி. இன்று என்னை விழாவிற்கு வழியனுப்பும் அத்தனை பேருக்கும் ஆர்வமும் சந்தோசமும் இரட்டிப்பாய் இருப்பதை உணர முடிந்தது.
கலைபண்பாட்டுதுறை அமைச்சர் கமலகேசவன்;; கரங்களால் பரிசுபெறுவது என்பது சாதரண விசயமாக இருந்தாலும் எனக்கு அது சாகித்திய அகடமி விருது பெறுவதுபோல சந்தோசமாக இருந்தது.
புதுவையிலிருந்து மூன்றரை மணிநேரம் பயணம் சென்னைக்கு.பேருந்து புறப்பட்டதும் என் மனப்பறவை சிறகை அகலமாய் விரித்தது.
ஆயிரம்பேர் கொண்ட கூட்டத்தில்ää மேடையேறி முதன்முதலாக பரிசுபெறப்போகும் காட்சியை பல்வேறு விதமாக யூகித்துக்கொண்டிருந்ததுääமனசு. மேலும்ää பரிசு தந்ததும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசச்சொல்வார்கள் அல்லவா. . . அதற்கு முன் ஏற்பாடாய் ஆறுவாக்கியங்கள் கொண்ட ஓர் உரையை நூறு முறை பேசி ஒத்திக்கை பார்த்தது. முன்றுமணிநேர நிகழ்ச்சியில் ää என் அல்லது நான் சம்பந்தப்பட்டதென்னவோ அதிகபட்சமாய் மூன்று நிமிடம்தான். ஆனால் அதற்குபோய். . . மூன்று நாட்கள் தூங்காமல். . . .
மேடையேறியவுடன் மக்கள் கூட்டத்தைப்பார்த்து கைகூப்பிஉயர்த்தி வணங்குவார்களே அதுபோல் செய்ய வருமா? அல்லது நம் செய்கையில் செயற்கைத்தனம் மேலோங்கி நின்று ää கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்துமா? அமைச்சரின் அருகில் சென்றதும் கைகுலுக்கிக்கொள்வதா? அல்லது கும்பிடு போடுவதா? எறும்பு போன்று வரிசையாய் யோசனைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துக்கொண்டிருந்தன.
விழா அரங்கம்.
முதல்வரிசையில் எனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்துகொண்டிருந்த போதிலும் உண்மையில் நான் சந்தோசம்ääஆர்வம்ää லேசான பயம் கொண்ட ஊடகத்திற்கிடையில் மிதந்து கொண்டிருந்தேன்.
அரசியல்வாதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஏதும் குறிக்கப்பட்ட காலத்தில் தொடங்குவது சாத்தியமில்லாதது. ஒரு மணிநேரம் தாமதமாக நிகழ்ச்சித்தொடங்கியது.
முதலில் விழாவிற்கு வருகை தந்திருந்த தொலைக்காட்சி பங்குதாரர்கள்ää நிகழ்ச்சிஅமைப்பாளர்கள்; பேசினார்கள். தொடர்ந்து சினிமாத் துறையை சார்ந்தவர்கள் கதைத்தார்கள்.
நிமிடங்கள் தேய்ந்துகொண்டிருந்தது. கலை நிகழ்ச்சியின் ஒரு பங்கை அமைச்சர் கமலகேசவன் பேசுவதற்;கு முன்பே அரங்கேற்றினார்கள். எனக்கு டென்சன் தாங்க முடியவில்லை. யார் யாரோ பேசினார்கள். நிகழ்ச்சிக்கு மைக்செட் ஏற்பாடு செய்து கொடுத்தவன்கூட காலநேரம் பார்க்காமல் கத்திபோட்டுக்கொண்டிருந்தான். இதற்கிடையில் ää அமைச்சர் எழுந்து கையசைத்துவிட்டு மேடையைவிட்டு இறங்கிக்கொண்டிருந்தார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் பொறுமையாய் காத்திருந்தேன். நிகழ்ச்சி முடிய கால்மணி நேரம் இருக்கும்போதுää ஒரு ஆசாமி ää நிகழ்ச்சி எற்பாடு செய்த தொலைக்காட்சியின் அடையாள அட்டை பொருத்தியிருந்தார் ää ~சார். . .நீங்கதான பாண்டிச்சேரி. . .பாரதிகுமார்.? ஒரு நிமிடம் என்று சொல்லியபடியே பவ்யமாய் குனிந்து காதருகே வந்;துää ~சார் . . . . கோவிச்சுக்காதீங்க . . . நேரம் இல்லாமபோச்சு. அமைச்சருக்கு ஏதோ அர்ஜென்ட் வேலையாம்ää அவரும் போயிட்டார். அதனால . .. . என்றபடி. . . தன் கையிருந்த பரிசுப்பொட்டலம்ää மலர்க்கொத்துää எனக்கு மேடையில் அணிவிக்கவிருந்த சால்வை இவற்றை என் மடியில் வைத்துவிட்டு சென்றார்.
நடுரோட்டில் நிற்கவைத்து ~நச்சென்று நடுமண்டையில் யாரோ செருப்பால் அடித்தது போன்று இருந்தது ää எனக்கு .
என் கரங்களில் திணிக்கப்பட்டவை பரிசுகள் போல தோன்றாமல் ää மாறாக ஏதோ அவமானச்சின்னங்கள் என்மீது கிடப்பதாக தோன்றவேääவிருட்டென்று எழுந்து அவைகளை அந்த இருக்கையிலேயே விட்டுவிட்டு வீடு நோக்கி புறப்பட்டேன்.
- புதுவைப் பிரபா-

1 comment: