Friday, June 19, 2009

சிறுகதை-2

காலை பத்து மணி.
~~அடுத்தது நாமதான். தயாராயிரு சந்திரன்ää தன் மனைவி தேவகியிடம் சொன்னான்.
~~ என்னங்க. . . என்னால முடியிலீங்க. எட்டு மணிக்கு இந்த எழவெடுத்த அஸ்பித்திரிக்குள்ள நுழைஞ்சோம். இன்னும் டாக்டர பார்த்தபாடுயில்ல.. சுவற்றில் தன் தலையை சாய்த்துக்கொண்டிருந்தபடியே தேவகி முணுமுணுத்தாள்
~~தோ. . . . . தோ. . . . . அடுத்தது நாமதான்
அரசு மருத்துவமனையின்; புற நோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் கூடும் கூட்டத்திற்கு அளவேது? நோய்கள் நிரம்பிய இவ்வுலகில் மருத்துவருக்காக நோயாளிகள் காத்துக்கொண்டிருப்பதுää நாட்கள் கணக்கில் கூட நீள்வதுண்டு.
~~தேவகி. . . . தேவகி. . . அட்டன்டரின் குரலில் தேவகிக்கு நோய் தீர்ந்துவிட்டது போன்ற சந்தோஉம். சந்திரனும் தேவகியும் உள்ளே நுழைந்தார்கள். ~~ பேரு சொல்லுமா
~~தேவகி
~~என்ன பிரச்சனை உனக்கு?
~~ஒருவாரமா பயங்கரமா தலைய வலிக்குது டாக்டர். மண்டைக்குள்ள மெஉpன் வைச்சு ஓட்டுராப்ல இருக்கு.
~~அப்படியா!
ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்துக்கொண்டிருங்கும்போதேää
~~தேவையில்லாத வேலைகளையெல்லாம் இவளே இழுத்துபோட்டுகிட்டு செய்யறா. அதுக்கூட இவ தலைவலிக்கு காரணமா இருக்கலாமில்ல டாக்டர். . . அப்பாவித்தனமாக சந்திரன் கேட்டான்.
டாக்டர் அதை பொருட்படுத்தவேயில்லை. ஆமாம். இதுபோன்ற கேள்விகெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் அவர் ஸ்டேடஸ் என்னாவது?
ஒரு சீட்டில் கிறுக்கிகொண்டேää ~~ பாரும்மா.... ரத்தம் டெஸ்ட்டுக்கு எழுதிகொடுக்கிறேன். பதினெட்ல போய் ரத்தம் கொடுத்துட்டு வெயிட் பண்ணு. . . ஒரு மணிநேரத்துல ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் வந்திடும். அத வாங்கிட்டு வந்து என்ன பாரு. .. . .
~~திரும்பவும் லைன்ல நிக்கனுமா டாக்டர் தேவகி பரிதாபத்துடன் கேட்டாள்.
~~நோ. . . . நோ. . . . தேவையில்ல. ரிசல்ட் கொண்டு வந்திங்கனா . . . நேரா உள்;ளே வரலாம். . .
வெளியே வந்ததும்ää அட்டன்டரை கேட்டான்;ää சந்திரன். ~~பதினெட்டு எங்கண்ணே இருக்கு. . . ?
~~கீழ்தளத்துல . . . படிக்கட்டுல இறங்கின உடனே . . . பீச்சாங்கை பக்கதுல பாரு போர்டு தெரியும் கடுகடுப்பான குரலில் பதில் வந்தது. என்ன செய்வது? ஆண்டுகள் ஆயிரம் போனாலும் அரசு மருத்துவமனை அட்டன்டர்கள் மட்டும் கனிவாகப்பேச கற்றுக்கொள்ளப்போவதே கிடையாது. அவர்களை மாற்றவும் முடியாது. அவர்களால் மாறவும் முடியாது.
பதினொரு மணி.
சைலண்ட் மோடில் இருந்த செல்போன்ää வாசுவின் பாக்கெட்டுக்குள் அதிர்ந்தது.
~~ஹாய் . . . . மாலா. . . ? லோ டெசிபலில் பேசினான்.
~~ லேப்ல தான் இருக்கேன். அப்படியில்ல . . . டூட்டி டைம்லää அனாவசியமா போன்ல பேசிகிட்டு இருக்கக்கூடாதுன்னு நேத்துதான் சீப் டாக்டர் சொன்னார் அதான். . . .
~~வேணாம் வேணாம். கட் பண்ணிடாத. இப்பநான் பேசிகிட்டு இருக்கிற மாதிரியே யாருக்கும் தெரியாது. வேலையை பார்த்துகிட்டேதான் பேசறேன்.
ஒரு மாதம் முன்பு வரை மாலாவும் வாசுவும் தனியார் மருத்துவமனை ஒன்றில்ää ஒன்றாக தான் வேலைபார்த்து வந்தார்;கள். அரசாங்க மருத்துவமனையில் அப்பாயின்மென்ட் கிடைத்தவுடனே வாசு இங்கு வந்து சேர்ந்துவிட்டான். ஒன்றாக இருக்குவரை அவர்களுக்குள் நட்;பாக இருந்த உறவுää பிரிவில் காதலாக உருமாறியது.
காதலுக்கு கண் மட்டும்தான் கிடையாது. ஆனால் காதலர்களுக்கு எதுவுமே கிடையாது. நேரம்காலம் பார்க்காமல் போன் செய்துää கண்டதையும் பேசி நேரத்தையும் பணத்தையும் வீண்ணடிப்பவர்கள் அவர்கள்.
பனிரெண்டு மணி
ஆட்டோவில் ஏறி அமர்ந்துகொண்டதும்ää ~~என்னங்க டாக்டர் இப்படி சொல்லிட்டாரு? தேவகிää விரக்தியாய் கேட்டாள்.
~~ நான் அப்பவே சொன்னேன் பார்த்தியாää ஒனக்கு ஒன்னுமில்லையின்னு. சாதா தலைவலிதானாம். அவருதான் மாத்திரை கொடுத்து இருக்காருல்ல அத தவறாமல் சாப்பிடு. தலைவலி நிக்கலேன்னா அடுத்தவாரம் இதே கிழமையில வரசொல்லியிருக்காருல்ல. . . அப்போ வந்து பார்ப்போம்.
~~எதுக்கும் மாலா சொன்னமாதிரி அவ வேளை செய்யற ஆஸ்பிட்டல்லேயே செக் பண்ணிப்பார்ப்போமா?
அதிர்ச்சியாய் திரும்பிபார்த்த சந்திரன்ää
~~அடிப்பைத்தியக்காரி. . . அங்க போனா எல்லாத்துக்கும் காச கொண்டாää பணத்த கொண்டான்னுää பேய் புடுங்கிறமாதிரி புடுங்கிடுவாங்கää அதுவும் இல்லாம அதுக்கு இதுக்குன்னு சொல்லிää மாலாவோட சம்பளத்துலேயே முழுசா கை வச்சிடுவாங்கான்ன. அதனாலதான் நாம ஜி.எச்யிலேயே மாலாவுக்கு தெரியாம காட்டிடலாம்ன்னு நீ சொன்னதால தானே மைலத்துக்கு போவறதா அவகிட்ட பொய் சொல்லிட்டு இங்க வந்தோம். . . .இப்போ நீயே இ;ப்படி பேசற. . .
மாற்றி மாற்றி பேசுவது பெண்களுக்கு ஒன்றும் புதுசு அல்லவே.
ஒரு மணி
வாசுவை கன்னாபின்னாவென்று திட்டிக்கொண்டிருந்தார் ääடாக்டர்.
~~ நீ செய்தது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா?. தேவிங்கற பேஉன்ட்;டோட பிளட் ரிப்போர்ட்டையும் தேவகிங்கிற பேஉன்ட்டோட பிளட் ரிப்போர்ட்டையும் மாத்தி மாத்தி எண்டிரி பண்ணியிருக்க. தேவிங்கற பொண்ணுக்கு சின்ன கம்ப்ளெய்ன்ட் .அவங்க பிளட்ல இப்படிப்பட்ட பிரச்சனை இருக்க வாய்ப்பில்லையேன்னு சந்தேகப்பட்டு அவங்கள ரிப்பீட் பிளட்டெஸ்ட் பண்ண சொன்னேன். அந்த ரிசஸ்ட்ட வச்சிதான் என்ன தப்பு நடந்திருக்குன்னு என்னால ஒரு முடிவுக்கு வர முடிஞ்சுது.
தேவி - ஓ.கே. ஆனா தேவகி. . . ? அவங்களுக்கு டபிள்யு. பி. சி. கவுண்ட்ஸ் சுத்தமா டவுணா இருக்கு. அந்த கவுண்ட்ஸ் வேல்யுவ பார்;க்கும்போதாவது நீ முழிச்சிகிட்டு இருக்க வேணாமா?. லிக்யுமியாவா இருக்கலாம். அப்படியிருந்தா அந்த கேஸ் ரெண்டு மூணு நாளைக்கு தாக்குபிடிக்கிறதே கஉ;டம்.
தேவிää தேவகி . . . வேற வேற பேருää வேற வேற ஹாஸ்பிட்டல் நெம்பர். இருந்தும் உன்னோட கேர்லெஸ்னெஸ்னால ஒரு உயிரு போகப்போகுது. பை சான்ஸ்ääஅவுங்க வேற ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டா பரவாயில்ல.அப்படி இல்லேன்னா. . .நோ . .நோ. . நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. தேவகியோட கேஸ்உpட்ல இருக்கிற அட்ரச கண்டுபிடுச்சு அவங்ள உடனே கூட்டிட்டு வரவேண்டியது உன்னோடபொறுப்பு. அவங்களுக்கு உடனே போன்மேரோ பண்ணிட்டு ääகிமோதெரபி ஆரம்பிக்கனும்.
பிரச்சனையின் ஆழத்தை உணர முடிந்ததால் வாசுவிற்கு ~சாரி சொல்லக்கூட கூச்சமாயிருந்தது.
~மாலாவிடம் பேசிக்கொண்டே... ச்சே! அவனுக்குள் காலம் கடந்த ஞானம் .
ஓரிரு நிமிடங்களில் விலாசத்துடன் புறப்பட்டான்.
இரண்டு மணி. ~~என்னங்க நீங்களும் போய் குளிச்சிட்டுவந்து சாப்பிடுங்க. உங்க மேல வர்ற ஹாஸ்பிட்டல் வாசனைய வச்சு மாலா கண்டுபிடிச்சுடப்போறா. அவளுக்கு சந்தேகம் வந்துட்டுதுன்னு வச்சிக்கோங்கää யாருக்காவுது போன் கீன் பண்ணி எப்படியும் தெரிஞ்சுக்குவாää அவள பத்தி உங்களுக்கு தெரியாது. தேவகி எச்சரித்தாள்.
~~ அடிப்போடி. .. அவள பத்தி எனக்கு தெரியாதா? தெரிஞ்சதனாலதானää கேஸ்உட் பதியும்போதுää பேர மட்டும் தேவகின்னு எழுதிட்டுää அட்ரஸ்கிட்ரசலாம் தாருமாரா மாத்தி மாத்தி எழுதி கொடுத்துட்டேன். உண்மையிலேயே அப்படி ஒரு அட்ரஸ் இருக்குமான்னே சந்தேகம்தான். அதனாலää நம்ம பொண்ணால மட்டுமில்ல வேற யாராலேயும் நம்மல கண்டேபிடிக்க முடியாது. சந்திரன் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும்போதே வலியில் துடித்த தேவகி குரல் கொடுத்தாள்.
~~ என்னங்க. . . தலைய திரும்பவும் வலிக்குதுங்க. உயிர்போவற மாதிரி வலிக்குதுங்க. . . .
-புதுவை பிரபா-

No comments:

Post a Comment