Friday, June 19, 2009

சின்னஞ்சிறுகதை

பொய் சொல்லக்கூடாது அப்பா

~~வளர்ந்துட்டேயில்ல. . .தர்ட் ஸ்டாண்டர்ட் வேற போயிட்ட. . .இனிமேää நீயேää தானா குளிக்க கத்துக்கணும்.. . சரியா. . . அம்மா சொன்ன வார்த்தைகளுக்கு முதன்முறையாக உயிர் கொடுக்கää குளியலறைக்குள் நுழைந்தான்ääராகுல்.
முதலில் அவன் கண்ணில் பட்ட சோப்பு டப்பாவை எடுத்துää சோப்பை இரண்டு மூன்று முறை திருப்பித்திருப்பி பார்த்துக்கொண்டிருக்கும்போதேää அவன் மனது ääஅதிகாலையில்ää அப்பாவும் எதிர்வீட்டு டேனியல் மாமாவும் பேசிக்கொண்டிருந்த நொடிகளுக்கு பின்நோக்கிச் சென்றது.
~~ ஏன் சார். . .நீங்க எப்பத்தான் உங்க கம்பனியில சீனியர் மேனேஜரா ஆவறது?
~~டேனியல் சார். . . நான் நெனச்சிருந்தாää ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே ஆகியிருக்கலாம். என்ன. . .சோப்பு போட்டிருக்கணும்.மத்தவங்க மாதிரி நானும் சோப்பு போட்டிருந்தேன்னா. . . இந்நேரம் சீனியர் மேனேஜரா என்ன ääரீஜனல்; மேனேஜராகவே ஆகியிருப்பேன். ஏன்ன பண்ணறது? ஏனக்குன்னு இல்லீங்க. . .எங்க பரம்பரைக்கே சோப்பு போடற பழக்கமே கிடையாது.
மீண்டும் சோப்பை இரண்டுடொருமுறை திருப்பித்திருப்பி பார்த்துவிட்டுää ~ ச்சே! நம்மல பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டுääஇப்போ அப்பாவே இப்படி அப்பட்டமா பொய் சொல்றாரே! ராகுல் தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டான்.
விசயம் வினங்கும்வரையோääஅல்லது யாராவது விளக்கும்வரையோää அப்பாவை பற்றிய நினைப்பு அவனுக்குள் மாறப்போதவதேயில்லை.
-புதுவை பிரபா-

No comments:

Post a Comment