Monday, September 15, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான படக்கவிதை













அழகென்ற சொல்லுக்கு
அர்த்தம் தருபவளே !
மூடிய விழிக்குள்ளும்
முழுவதுமாய் வருபவளே !

உன் காந்த விழிப்பார்வை – என்
எண்ணத்தை ஈர்க்குதடி
உனை பார்க்கும் நொடிப்பொழுதில்
நுரையீரல் வேர்க்குதடி 

உன் உதட்டில் பூத்திருக்கும்
மெல்லிய புன்னகைப்பூ
அதை பார்க்கின்ற உன் கூடை
பூவிற்கும் பொச்சரிப்பு

பெண்ணே....!

நீ சாய்ந்திருக்கும் கதவாக
நான் ஆகக்கூடாதா ?
உன் விரல் பட்ட வரத்தாலே
என் ஆயுள் கூடாதா ?

புடவை கட்டி நிற்கும் பொன் நகையே!
பூகம்பம் நிகழ்த்தும் புன்னகையே !
உன்னால் ...
ஹார்மோன்கள் சுரக்கிறது
சுயம் எனக்கு மறக்கிறது
ஒவ்வொரு ‘ செல்’ லும் என்னுள்
ரெக்கைகட்டி பறக்கிறது  


உன் அழகுநீர் பாய்ந்து பாய்ந்து
என் கற்பனை செழிக்கிறது
உனை வர்ணிக்க வார்த்தை இன்றி
என் தாய்மொழி  விழிக்கிறது


பாரடி..

இந்த  கவிதைகூட அழகாச்சு
உன்னோடு பழகி
ஐயம் ஏதுமில்லையடி -நீ
பிரபஞ்ச பேரழகி

---------------------------------------------- 

புதுவைப்பிரபா

4 comments:


  1. பிரபஞ்ச பேரழகிக்கு பொருத்தமான கவிதை... அசத்தலான வரிகள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    தித்திக்கும் கவி வரிகள் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
    ---------------------------------------------------------------------------------------

    தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அன்பிற்கினிய ரூபன் அவர்களின் பாராட்டுதலுக்கும் கவிதைகள் சேர்ந்தமை குறித்த தகவலுக்கும் நன்றி

    தோழமையுடன்
    புதுவைப்பிரபா

    ReplyDelete
  4. சரிதான்...மிகப் பொருத்தம்...! புதுவையில் தாங்கள் எங்கு பணிபுரிகிறீர்கள்? எனது வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்.

    ReplyDelete