Monday, September 15, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014க்கான கவிதை




அழுகுரல் ஓய்ந்தபாடில்லை

அழுகையின்
அதிர்வெண்ணும் அடர்த்தியும்
அவ்வப்போது மாறுபடுகிறதே தவிர
அறவே அற்றுப்போகவில்லை

வடகிழக்கிலிருந்து
ரசிக்கமுடியும்படியான
பச்சிளங்குழந்தைகளின் அழுகுரலும்
தென்மேற்கிலிருந்து
பயங்கொள்ள வைக்கும்
பெரியவர்களின் அகோர அழுகுரலும்
கேட்டபடியே இருக்கிறது.

வருகையை பதிவுசெய்ய
ஒருவித அழுகையும்
வெளியேற்றத்தை உறுதி செய்ய
ஒருவித அழுகையுமாய்
அந்த வளாகத்திலிருந்து
அழுகைகள் அணிவகுக்கின்றன

அந்த மருத்துவமனையின்
பிரசவ அறைக்குள்ளிருந்து வருகிற
மெல்லிய சங்கீத அழுகைக்கும்
பிணவறைக்கு வெளியிருந்து பரவுகிற
கனத்த ஓல அழுகைக்கும்
இடைப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது
நமக்கான வாழ்க்கை.


புதுவைப்பிரபா

4 comments:

  1. அருமையான கவிதை... மனதை பிசைகிறது... வாழ்த்துக்கள் பிரபா...

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின்இரண்டு கவிதையும் வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. அன்பிற்கினிய ரூபன் அவர்களின் பாராட்டுதலுக்கும் கவிதைகள் சேர்ந்தமை குறித்த தகவலுக்கும் நன்றி

    தோழமையுடன்
    புதுவைப்பிரபா

    ReplyDelete
  4. வணக்கம்
    கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். மேலும் விபரம் பார்வையிட இதோ முகவரி
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...: ரூபன்& யாழ்பாவாணன்  இணைந்து நடத்திய  உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete